Foreign Jobs in Sri Lanka
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இலங்கையில் பெறுவதற்கான இலகுவான வழி
நீங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இலங்கையில் தேட கூடிய நன்பர்களாக இருந்தால் இந்த வழிமுறை உங்களுக்கு இலகுவானதாக காணப்படும். நம்பகதன்மையற்ற முகவர் நிலைகளில் வேளைவாய்ப்புக்காக காத்திருக்காமல் நீங்களே உங்களுக்கான வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.
அதற்கான வழிமுறையை பார்க்கலாம்.
முதலில் உங்களுக்கு தெரிந்திருக்கலாம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பற்றி அதாவது, நீங்கள் வெளிநாடு செல்வதற்கு ( பீரோ காசு) என்று பணம் செலுத்தும் பணியகத்தில் அவர்களே அதிக வேலைவாய்ப்பு பற்றி அவர்களது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஒவ்வொரு நாளும் வெளியிடுகிறார்கள்.
அதனை பார்வையிட்டு உங்களுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம். இலங்கையில் அங்கிகாரம் பெற்ற அனைத்து முகவர் நிலையங்களின் வேலைவாய்ப்புகள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வது?
அதாவது அந்த இனையத்தில் காணப்படக்கூடிய வேலைவாய்ப்புகளை அந்தந்த முகவர் நிலையங்களின் தொலைபேசி இலக்கம் மற்றும் ஜிமெயில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.
அந்த இனையத்தில் எவ்வாறு வேலைவாய்ப்புகளை பெறுவது பற்றி கீழே உள்ள வீடியோவை பார்வையிடவும்.